இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இப்படியா?…. பிக்பாஸ் போட்டியாளருக்கு ஆர்மி தொடங்கிய ரசிகர்கள்…. அவங்க யார் தெரியுமா….???

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது நடிகை ஓவியா தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். முதல் முதலில் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு ஆர்மி தொடங்கியது ஓவியாவுக்கு தான். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இதனிடையே இதுவரை தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் இன்று மாலை தொடங்குகிறது.

இந்நிலையில் ஓவியாவை மென்று அளவிற்கு இதுவரை எந்த ஒரு பெண் போட்டியாளர்களுக்கும் வரவேற்பு கிடைத்ததில்லை.வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகு தான் அதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுக்கு ட்விட்டரில் ஆர்மி தொடங்கப்படும். ஆனால் இந்த முறை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பெண் போட்டியாளர் ஒருவருக்கு ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது.

அதாவது ஜனனி என்ற பெண் போட்டியாளருக்கு ட்விட்டரில் ரசிகர்கள் ஆர்மியை தொடங்கியுள்ளனர். இலங்கையை சேர்த்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர்.தற்போது ஜனனியை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட நிலையில் அவரின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.