அம்மாடியோ இதற்கு இத்தனை லட்சமா?…. பிக்பாஸ் வீட்டின் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ள நிலையில் நேற்று மிக பிரம்மாண்டமாக ஆறாவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். இதில் பத்து பெண் போட்டியாளர்கள், 9ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் வார இறுதி நாட்களில் இரவு 9:30 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சி ஜனவரி 2023 ஆம் ஆண்டு மூன்றாவது வாரத்தில் முடிவடையும். இந்நிலையில் முதல் நாள் நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஆரம்பமே யூடியூப் பிரபலம் ஜி பி முத்து அவர்களின் அட்ரா சிட்டி தான்.

இனி வரும் நாட்களில் ஜிபி முத்துவால் பிக் பாஸ் வீடு பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதை அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வீடு படு பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ளது. முதலில் பார்த்த நாம் அனைவருமே இவ்வளவு பிரம்மாண்டமா என வியந்திருப்போம்.தற்போது பிக் பாஸ் வீட்டிற்காக பிக் பாஸ் குழு செய்த செலவு எவ்வளவு என்பது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பிக் பாஸ் வீட்டிற்காக மட்டும் பிக் பாஸ் குழு 75 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.