பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸாக மாஸ் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ள நிலையில் நேற்று மிக பிரம்மாண்டமாக ஆறாவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். இதில் பத்து பெண் போட்டியாளர்கள், 9ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் வார இறுதி நாட்களில் இரவு 9:30 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சி ஜனவரி 2023 ஆம் ஆண்டு மூன்றாவது வாரத்தில் முடிவடையும். இந்நிலையில் முதல் நாள் நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஆரம்பமே யூடியூப் பிரபலம் ஜி பி முத்து அவர்களின் அட்ரா சிட்டி தான்.

 

இனி வரும் நாட்களில் ஜிபி முத்துவால் பிக் பாஸ் வீடு பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதை அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இதனுடைய பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வியூகங்கள் அடிப்படையில் ஏராளமான பிரபலங்களின் பெயர்கள் வெளியானது. அதில் பலரும் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளே நுழைந்துள்ளனர்.

இதனிடையே இணையத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவில்லை. இதனைத் தொடர்ந்து மைனா நந்தினிக்கும் பிக் பாஸ் குழுவினருக்கும் ஏதாவது பிரச்சனையா என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.ஆனால் உண்மையிலேயே மைனா நந்தினியை சர்ப்ரைஸாக பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்க பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால்தான் அவர் நேற்று தொடக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.இனிவரும் நாட்களில் மைனா நந்தினி சர்ப்ரைஸாக பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.