தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கியவர் சரத்குமார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடி பில்டர் ஆகவும் இருப்பவர். இவர் முதன் முதலில் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூரியன், வைதேகி கல்யாணம் மற்றும் சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.

அந்தத் திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தன. இதுவரை 130 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சாயாதேவியை சரத்குமார் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அவருடன் விவாகரத்து செய்த அந்த வருடமே நடிகை ராதிகாவை காதலித்து மறுமணம் செய்து கொண்டார் சரத்குமார். முதல் மனைவியான சாயாதேவியை விவாகரத்து செய்வதற்கு நடிகை ராதிகா தான் காரணம் என இணையத்தில் செய்திகள் பரவியது. ஆனால் ராதிகா அதற்கு காரணம் இல்லை. டாப் நடிகை ஒருவர்தான் அதற்கு காரணமாக இருந்துள்ளார். சாயாதேவியை திருமணம் செய்து நன்றாக வாழ்க்கை சென்று கொண்டிருந்த சமயத்தில் ஒரு சில நடிகைகளுடன் சரத்குமார் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

அப்படி 90களில் படிகட்டி பறந்த நடிகை நக்மாவுடன் நெருக்கமாக சரத்குமார் இருந்த நிலையில் இருவரும் காதலித்து வந்தனர் . பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் கூட இருந்த நிலையில் சாயாதேவியை 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் சரத்குமார். இதனால்தான் விவாகரத்து செய்து பிரிந்துள்ளார். ஆனால் அந்த காதல் நீடிக்காமல் ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்ததால் சரத்குமாரின் வாழ்க்கையை அப்படியே மாற்றிய ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
