வாலி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரனுக்கு பதில்….. முதலில் கமிட்டான நடிகை இவங்கதான்…. வருத்தம் தெரிவித்த பிரபல நடிகை….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்.இவரின் நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வாலி. இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார்.அஜித்தின் சினிமா பயணம் ஆரம்ப கட்டமான அந்த சமயத்தில் இரட்டை வேடத்தில் நடித்தது மிகவும் நெகட்டிவ் ஆக பேசப்பட்டது.

இருந்தாலும் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சிம்ரன் வேடத்தில் நாயகியாக நடிப்பதற்கு முதலில் படக்குழுவினர் கீர்த்தி ரெட்டியை அனுகியுள்ளனர். ஆனால் அவர் முடியாது என கூறி விட்டதால் சிம்ரன் கமிட் ஆகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவரை தாண்டி மீனா மற்றும் ரோஜாவிடமும் வாலி திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கேட்கப்பட்ட நிலையில் அவர்களும் சில காரணங்களால் மறுப்பு தெரிவித்து விட்டன.

இதனிடையே நடிகை மீனா தனது கணவர் இறப்பிற்கு பின்னர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது.அதாவது சினிமா பயணத்தில் நிறைய ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் இறந்து விட்டேன். குறிப்பாக வாலி படத்தில் நடிக்க அணுகிய போது வேறொரு படத்தில் கமிட் ஆகி இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.

அதனைப் போலவே பிரெண்ட்ஸ் மலையாளத்தில் நான் நடித்தேன். ஆனால் தமிழில் தேவயானி வேடத்தில் நடிக்க என்னை அழைத்த போது தேதி தான் பிரச்சனையாக இருந்தது. இப்படி நிறைய பட வாய்ப்புகளை நான் இழந்துள்ளேன் என மீனா மிகவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.