நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் செம்மரம் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஒரு பக்கம் அல்லு அர்ஜுன் ஆக்ஷனில் களமிறங்க மறு பக்கம் ராஸ்மிகா மந்தனா ரொமான்ஸில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர்களுக்கு இடையே ஒரு பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார்.

“ஊ சொல்றியா மாமா”என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் வைரலானது. இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதற்கு இந்த பாடலும் சமந்தாவின் குத்தாட்டமும் ஒரு காரணம்தான். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தை எடுப்பதற்கு படக்குழு முடிவு செய்தது. இந்தத் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி களமிறங்க உள்ளார்.

இந்நிலையில் மீண்டும் புஷ்பா 2 திரைப்படத்தில் சமந்தா குத்து பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் நடனம் ஆடவில்லை என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சமந்தாவுக்கு பதிலாக பாலிவுட் நடிகைகளில் ஒருவர் நடனம் ஆடுவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் புஷ்பா 2 படத்தில் சமந்தாவிற்கு பதிலாக தமன்னா நடனம் ஆட உள்ளார் என தெரியவந்துள்ளது. இதனால் தமன்னாவின் ரசிகர்கள் மற்றொரு ஊ சொல்றியா மாமா பாடலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
