விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது.

இன்னும் ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் பல பிரச்சனைகள் மற்றும் பஞ்சாயத்துக்கள் என பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றன.அதிலும் குறிப்பாக ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையே உச்சகட்ட பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.வயதிற்கு கூட மரியாதை தராமல் பேசுவதாக தனலட்சுமியை ஜிபி முத்துவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த வாரத்தில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் கூறிய நிலையில் பலரும் சமையல் டிப்ஸ் சாந்தி மற்றும் அனைத்து டீமிற்கும் உதவி செய்த ஜி பி முத்துவை தேர்வு செய்துள்ளனர்.ஜி பி முத்து சிறந்த போட்டியாளராக தேர்வாண நிலையில் வெள்ளை வேட்டி சட்டை போட்டதற்கு இன்று மரியாதை கிடைத்து இருக்கிறது என தெரிவித்துள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.