“40 நாளில் நடக்க வேண்டியது, இப்பவே நடக்குது”…. ஷாக்கான கமல்ஹாசன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். முதல் நாளிலிருந்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்குகளை கொடுத்து வருகிறது.

இன்னும் ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் பல பிரச்சனைகள் மற்றும் பஞ்சாயத்துக்கள் என பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றன.அதிலும் குறிப்பாக ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையே உச்சகட்ட பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.தற்போது ஒரு வாரம் முடிவில் சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் 40 நாட்கள் கழித்து நடக்க வேண்டிய விஷயம் எல்லாம் முதல் வாரத்திலேயே நடக்கிறதே என கமல்ஹாசன் ஆர்வத்துடன் பேசி உள்ளார். தற்போது அந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.