ரொம்ப சைலண்டாக…. பிக்பாஸ் வீட்டில் கணவர் பற்றி முதல்முறையாக பேசிய ரட்சிதா…. என்ன சொன்னாங்க தெரியுமா….????

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளன.இதில் பெரும்பாலும் நாம் பார்த்த முகங்களை அதிக அளவு கலந்து கொண்டுள்ளனர்.வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் பல டாஸ்க் கொடுத்து வருகிறது. அதில் முதல் நாளிலேயே நான்கு பேர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதே சமயம் இந்த முறை கேப்டன் தேர்வும் நடைபெறவில்லை.வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிந்து வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகையான ரச்சிதா கலந்து கொண்டுள்ளார். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்ட நிலையில்,இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக அண்மையில் பல தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார் ரட்சிதா எந்த ஒரு இடத்திலும் தனது கணவர் குறித்து எதையும் பேசவில்லை. இந்நிலையில் தனது கணவர் பற்றி பிக் பாஸ் வீட்டில் அவர் பேசியுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.