மீண்டும் மனைவியுடன் இணையும் தனுஷ்….. மறைமுகமாக பதிவு போட்ட ஐஸ்வர்யா…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்துள்ளது. சினிமாவில் கலக்கி வரும் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதனிடையே சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இந்தச் செய்தியை ரசிகர்கள் மத்தியில் பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் மகன்கள் இருவருமே தனது பெற்றோர்களிடம் அன்பு செலுத்தி வருகிறார்கள்.

அவ்வப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் தனித்தனியாக இரண்டு மகன்களும் வெளியில் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதரிடையே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் இணைய போவதாக அண்மைக்காலமாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறன.இருந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 150 கோடி மதிப்பில் போயஸ் கார்டனில் தனுஷ் கட்டியுள்ள புது வீட்டிற்குள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா மிரர், பிளவர், லவ்வர் இதெல்லாம் எப்போதும் நேர்மறை சக்தியை பிரதிபலிக்கிறது என ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் எப்போது தனுசுடன் சேரப் போறீங்க சீக்கிரம் நல்ல முடிவா சொல்லுங்க என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.ஒருவேளை தனுசுடன் சேரும் அந்த நாளுக்காகத்தான் ஐஸ்வர்யா இப்படி மறைமுகமாக பதிவு போட்டு உள்ளாரா என கேள்வி கேட்டு அதனை வைரல் ஆக்கி வருகிறார்கள்.