திடீரென தலை முடியை வெட்டி கொண்ட லெஜெண்ட் பட நடிகை….. எதற்காக தெரியுமா?…. ஷாக் நியூஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஊர்வசி ரௌத்தலா அண்மையில் லெஜெண்ட் சரவணன் திரைப்படத்தில் நடித்த அசத்தி இருந்தார். பல இந்தி படங்களில் இவர் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஊர்வசி ரவுதலா ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தனது முடியை வெட்டி உள்ளார்.

ஈரானிய பெண் அமிணியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி உயிரிழந்தபெண்கள் மட்டும் சிறுமிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனைப் போலவே உத்தரகாண்ட் மாநிலத்தில் விஐபிகளுக்கான ரிசார்ட் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றிய மறைந்த இளம் பெண் அங்கீதா பண்டாரிக்கு ஆதரவாகவும் இந்த முடிவை தான் எடுத்துள்ளேன் என ஊர்வசி குறிப்பிட்டுள்ளார்.

 

தனது முடியை வெட்டி கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த செய்தியை தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,ஈரானிய அரசிற்கு எதிராக உலகப் பெண்கள் அணி திரண்டு முடியை வெட்டிக் கொள்கிறார்கள். பெண்களை தயவு செய்து மதியுங்கள் . பெண்களின் புரட்சிக்கான சர்வதேச அடையாளம். தலைமுடி பெண்களின் அழகுக்கு அடையாளம்.

இதனை பொதுவெளியில் வெட்டி சமூகத்தின் அழகு நடைமுறைகளை பற்றி பெண்கள் கவலைப்படவில்லை என எடுத்துக்காட்டியுள்ளார். பெண்கள் எப்படி உடை அணிகிறார்கள்,நடந்து கொள்கிறார்கள் அல்லது வாழ்கின்றனர் என்பது பற்றி எந்த ஒரு விஷயமும் அல்லது எவரொருவரையும் முடிவெடுக்க பெண்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ள நிலையில் இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.