“எனக்கு இந்த நோய் இருக்கு”….. நடிகை டாப்ஸியின் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்…. மனதை கலங்க வைக்கும் பதிவு…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை டாப்ஸி. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் இவரின் தற்போதைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆரோக்கிய விஷயங்கள் குறித்து டாப்சி அளித்த பேட்டியில், ஆரோக்கியமும் முக்கியம் என்பதை நான் அனைவருக்கும் எடுத்துச் சொல்லி வருகிறேன் . இதனை அனைவருக்கும் புரிய வைப்பதற்காக எனக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளை எடுத்துக் கூற விரும்புகிறேன். சி சி ஓ எஸ் என்ற நோய் பாதிப்புடன் நான் போராடினேன்.

அதற்கான சிகிச்சையின் போது பல பக்க விளைவுகள் எனக்கு ஏற்பட்டது. யோகா போன்ற உடற்பயிற்சிகள் மூலம் நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தேன். அண்மையில் வெரிகோஸ் வெயின்ஸ் எனும் நரம்பு சம்பந்தப்பட்ட சிகிச்சை கூட செய்து கொண்டேன். இதனை வெளியில் சொல்வதற்காக வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. உடல் நலக்குறைவு என்பது சாதாரண விஷயம்.

இதனை வெளியில் சொல்வது அவமானம் கிடையாது. அப்படி அவமானம் என நினைத்தால் நமது ஆரோக்கியம் நமது கையை விட்டுச் சென்று விடும். வயது வந்த மகள்களுக்கு பெற்றோர் இந்த விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையாக இருந்தாலும் உடனே அவர்கள் பெற்றோர் அல்லது கணவருடன் தயக்கமில்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என டாப்சி அறிவுரை கூறியுள்ளார்.