செல்லம்மா சீரியலில் இருந்து நீக்கப்பட்ட அர்ணவ்…. இனி புதிய ஹீரோ இவர்தான்?…. இணையத்தில் வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல சீரியல் நடிகரான அர்ணவ் மற்றும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில நாட்களாக இவர்களின் விவகாரம் தான் இணையத்தில் வைரலாகிய வருகின்றது. இந்த திருமணத்திற்கு முன்பே திவ்யாவிற்கு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இதனை மறைத்து தற்போது இரண்டாவதாக அர்ணவ்வை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை திவ்ய அறிவித்த நிலையில் தனது இரண்டாவது கணவர் தன்னை ஏமாற்றி விட்டதாக வயிறு குற்றச்சாட்டை எழுப்பிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தார்.

அதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி பல குற்றச்சாட்டுகளை பகிர்ந்து வந்த நிலையில் திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நேற்று அர்ணவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நேற்று அவர் போலீசிடம் ஆஜராகாத நிலையில் ஷூட்டிங் சென்ற அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் செல்லம்மா சீரியலில் இருந்து அவர் நீக்கம் செய்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து செல்லம்மா சீரியல் குழுவினர் அவரை சீரியலில் இருந்து நீக்கம் செய்துள்ள நிலையில் தெலுங்கு நடிகர் ஒருவரை இந்த சீரியலில் நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.