71 வயது நடிகருடன் ஜோடி சேரும் ஜோதிகா…. அதுவும் எப்படிப்பட்ட படத்தில் தெரியுமா?…. போஸ்டருடன் வெளியான அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை ஜோதிகா. ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் இவரை மிகப்பெரிய அளவில் கொண்டாடினர். முதல் முதலில் 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். முதல் படமே நல்ல ஹிட் கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இதனால் திரை பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கண்டால் ஜோதிகா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அவ்வகையில் குஷி, திருமலை, மொழி,சந்திரமுகி மற்றும் வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் இவரது திரைப்பயணத்தில் இருக்கின்றன.

இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் சூர்யாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகினார் நடிகை ஜோதிகா. அதன் பிறகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் முழுக்க முழுக்க குடும்பத்தில் கவனம் செலுத்தி வந்த ஜோதிகா தனது பிள்ளைகள் ஓரளவு வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்தார்.

அவ்வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் இறுதியாக நடித்த உடன்பிறப்பே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பல வருடங்கள் கழித்து மலையாளத்தில் என்று கொடுக்கும் ஜோதிகா 71 வயது மூத்த நடிகரான மும்மூட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது படத்தின் தலைப்புடன் அழகிய போஸ்டரும் வெளியாகி உள்ளது.

மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு காதல் the core என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை jeo baby என்பவர் இயக்கியுள்ளார். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.