தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். அதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றது.

கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் முற்றிலும் சென்டிமென்ட் கலந்த குடும்ப திரைப்படம் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே வாரிசு திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து முதல் முறையாக பிக் பாஸ் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சம்யுக்தாவை பார்த்து அழகாக இருக்கீங்க என கூறியுள்ளார்.அது மட்டுமல்லாமல் படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் விஜய் சார் ரொம்ப பஞ்சுவாலிட்டியான மனிதர் என சம்யுக்தா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.சம்யுக்தா பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Actress #Samyuktha about #ThalapathyVijay ????????????#Varisu #Thalapathy67 @actorvijayhttps://t.co/0APLO1xIbb
— Vijay Fan Page ???? (@Vijay_Fan_Page_) October 17, 2022