விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள அசல் கோளாறு கடந்த சில நாட்களாகவே பெண் போட்டியாளர்களிடம் திமிராக பேசுவது மற்றும் சில அருவருப்பான செயல்களில் ஈடுபடுவது போன்று தொடர்ந்து செய்து வருவதால் ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவிடம் வாடா போடா என பேச தேவையில்லை என வம்பு இழுத்தார். ஆனால் குயின்சி மற்றும் நிவாஸினியிடம் இவர் வழிந்து வழிந்து பேசி இருக்கிறார்.

அவ்வகையில் குயின்சி பேசிக் கொண்டிருக்கும்போது அவரின் கையை தடவியது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. அதனைப் போலவே நிவாசினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்துக்கொண்டு அசல் கோளாறு கடலைப் போட்டு இருந்தார்.அதனைப் போலவே மைனாவின் கையைப் பிடித்து தடவியது மற்றும் மகேஸ்வரியின் காலை நோண்டியது என பல அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கும் அசல் தற்போது நிவாஸினி மடியில் அமர்ந்து அவருடன் கொஞ்சி பேசி உள்ளார்.அது மட்டுமல்லாமல் அவரின் மடியில் படுத்து கொண்டு இருக்கும் போது நாவை நீட்டி ரசித்தபடி அசல் செய்து இருக்கும் விஷயம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசங்கள் பலரும் அசலும் நிவாசினிக்கும் காதல் பற்றி கொண்டு விட்டது என கூறி அந்த செய்தியை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
