“Boys எல்லாம் போன எடுங்க உடனே இதை பண்ணுங்க”…. தமிழக அரசின் திட்டம் குறித்து நடிகர் கலையரசன் வெளியிட்ட வீடியோ….!!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்காக பெற்றோர் மாணவர் கூட்டம் நடத்தப்பட்டுஅதில் பலரும் பங்கேற்ற நிலையில் அவர்களில் உயர் கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிற துறையினருடன் இணைந்து உயர்கல்வி தொடர ஏதுவாக முகாம் நடைபெற்ற ஏராளமான மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் அது உதவியாக இருந்தது.

எனவே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வி தொடர முடியாத மாணவர்கள் பலனடையும் வகையில் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பை தொடர தமிழக அரசு மேற்கொண்டு உள்ள நடவடிக்கையில் பிரபல நடிகர் கலையரசன் தற்போது இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசி உள்ள வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.