விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

அதேசமயம் கடந்த வாரம் புதிய போட்டியாளராக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் நாற்பதாவது நாளில் நடக்க வேண்டியது எல்லாம் இப்போதே நடக்கிறது என கமல்ஹாசன் கடந்த வாரம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதன்படி தற்போது கடைசியில் நான்கு போட்டியாளர்கள் குறைவான வாக்குகளுடன் இருக்கிறார்கள். அவர்கள் செரினா, ஷிவின், மகேஸ்வரி மற்றும் சாந்தி இவர்கள்தான் கடைசியாக உள்ளன. இதில் சாந்தி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டாலும் இது குறித்த தகவல் சரியாக தெரியவில்லை.
