அடக்கடவுளே இப்படியா பேசுவாங்க?…. அந்த காரணத்திற்காக மோசமான கெட்ட வார்த்தை பேசிய பிக்பாஸ் போட்டியாளர்…. ரசிகர்கள் ஷாக்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.இதில் முதலில் 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் பின்னர் புதிய போட்டியாளராக மைனா நந்தினி வீட்டில் நுழைந்தார்.

தினந்தோறும் புதுவிதமான சண்டைகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக இருந்த நிலையில் கடந்த வாரம் ஜி பி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் நேற்று போட்டியாளர்களுக்கு பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த போட்டியின் தொடக்கத்தில் மோதல் ஆரம்பித்தது.

அதில் தன்னுடைய பொம்மையை யாரும் எடுக்காத காரணத்தினால் போட்டியாளர் மணிகண்டன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று மோசமான கெட்ட வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/Ilavarisirk/status/1584839995432792064