பிக்பாஸ் வீட்டில் காதல் புறா…. எல்லை மீறும் அசல் கோளார் -நிவாஸினி…. வீடியோ பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.இதில் முதலில் 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் பின்னர் புதிய போட்டியாளராக மைனா நந்தினி வீட்டில் நுழைந்தார். தினந்தோறும் புதுவிதமான சண்டைகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக இருந்த நிலையில் கடந்த வாரம் ஜி பி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளாறு நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது. மகேஸ்வரி, ஜனனி,நிவாசினி மற்றும் குயின்சி என தொடர்ந்து பல பெண்களிடம் மோசமான வகையில் அவர் நடந்து கொள்கிறார். இதனால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் அசல் கோளாறு மற்றும் நிவாஸினி இருவரும் காதலித்து வருவதாக ஒரு கிசுகிசு தற்போது எழுந்துள்ளது.

அதற்கு ஏற்றது போல இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றன.இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நிவாஸினி மற்றும் அசல் கோளாறு எல்லை மீறி நடந்து கொள்ளும் விஷயத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.