சவுத் இந்தியா பிரின்ஸ் மற்றும் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றுரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ் பாபு. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன். டோலிவுட்டில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு நீடா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரடு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படி அவரின் தொடர் வெற்றி திரைப்படங்களுக்கு பின் கடைசியாக வெளியான திரைப்படம் Sarkaru Vaari Paata. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற தவறியது. தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் மகேஷ் பாபுவிற்கு கிருஷ்ணா என்ற மகனும் இந்திரா தேவி என்ற மகளும் உள்ளனர். அவரின் மூத்த மகனான கிருஷ்ணாவின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரின் தந்தை மகேஷ் பாபு போலவே கிருஷ்ணாவும் வளர்ந்து நிற்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளன.
