தமிழ் சினிமாவில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நுழைந்து தற்போது முன்னணி நடிகைகளாக கலக்கிக் கொண்டிருப்பவர்கள் பலரும் உள்ளனர். அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகை வர்ஷா பொல்லம்மா. நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.

அதன் பிறகு விஜய் சேதுபதியின் 96 திரைப்படத்திலும்,விஜயின் நடிப்பில் வெளியான திகில் திரைப்படத்திலும் நடித்து அசத்தி இருந்தார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானார்.கன்னட நடிகையான இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு ஹீரோயினி வாய்ப்பை கிடைக்கவில்லை என்றாலும் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். இதனிடையே வர்ஷா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் மகனை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமீபத்தில் செய்தி ஒன்றை இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இது முற்றிலும் பொய்யான செய்தி என்று வர்ஷா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அந்த மாப்பிள்ளை யார் என சொல்லுங்க, அப்போதுதான் நான் என் குடும்பத்தினரிடம் சொல்ல முடியும் என கலாய்த்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Naakosam naake theliyakunda Pelli choopulu Chesi oka abbayi ni select chesinanduku anni websites ki thank you ???????? Aa abbayi evaru ani naaku chepthe, nen kuda maa inti vaallaki cheppestha:)
Prasthuthaniki naa Pelli choopulu choodalante, AHA lo swathimuthyam choodandi. #FAKENEWS pic.twitter.com/luLdwelMVk— Varsha Bollamma (@VarshaBollamma) October 28, 2022