பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்…. இணையத்தை கலக்கும் வெட்டிங் புகைப்படம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணியின் மகன்தான் ஹரிஷ் கல்யாண்.இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் நடிகை அமலாபாலும் நடித்திருந்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு அதிகமாக கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.நடிப்பில் தற்போது 100 கோடி வானவில் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனிடையே அண்மையில் தனது காதலை ரசிகர்களுக்கு வெளிப்படுத்திய ஹரிஷ் கல்யாண் முதன்முறையாக தனது காதலியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். நேற்று அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்தித்து தனக்கு கல்யாணம் என அவர் அறிவித்திருந்தார். அதே சமயம் தன்னுடைய திருமணம் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா ஜோடிக்கு இன்று காலை திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பிஎஃப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் புதுமண தம்பதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து.