38 வயதில் காதல் திருமணம்…. 40 வயதில் குழந்தை பெற்றெடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை…. ரசிகர்கள் வாழ்த்து….!!!

தமிழ் திரை உலகில் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிய அங்கம் வகிப்பது சின்னத்திரை சீரியல்கள் தான். அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த சீரியல் தான் காதலிக்க நேரமில்லை. கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதில் பிரஜின், சந்திரா, ஸ்ரீநாத் மற்றும் அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பல நடிகர்களும் நடித்தனர்.இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானவர்தான் நடிகை சந்திரா லக்ஷ்மன். மலையாள நடிகையான இவர் காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த சீரியலை தொடர்ந்து பல தமிழ் சீரியல்களில் நடித்து அசத்தினார்.

அதேசமயம் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையில் மலையாளம் தொடரில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதனிடையே சந்திரா மலையாளத்தில் ஸ்வந்தம் சுஜாதா என்ற சீரியலில் நடித்த நடிகர் டோஜூ என்பவரை காதலித்து தனது 38 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்த நிலையில் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் சந்திராவிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையை கையில் பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கடவுளுக்கு நன்றி, எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நன்றி என அவர் பதிவிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.