எனக்கு அந்த எக்ஸ்பீரியன்ஸ் கண்டிப்பா வேணும் – அம்மாவிடம் அடம்பிடித்த இளம்நடிகை

சினிமாவில் நடிப்பவர்களின் பெரும்பாலானவர்கள் தங்களது மகன், மகளை சினிமா வாரிசுகளாக தான் உருவாக்கி விடுகின்றனர், நட்சத்திர வாரிசுகளை அப்படி நிறைய பேரை, தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர், முத்துராமன் மகன் கார்த்திக், சிவாஜி மகன் பிரபு, முரளி மகன் அதர்வா, சத்யராஜ் மகன் சிபி, கமல் மகள்கள் ஸ்ருதி, அக்‌ஷரா, ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விஜயகாந்த் மகன் பிரபாகரன், லட்சுமி மகள் ஐஸ்வர்யா, பிரபு மகன் விக்ரம் பிரபு என பலரை இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். நடிக்க விரும்பாவிட்டால் இசை, இயக்கம் என இறங்கி விடுகின்றனர்.ஆனால், சில நேரங்களில் திடீரென சினிமா வாரிசுகளே, அவர்களாக விரும்பி சிறு வயதிலேயே நடிக்க வருவதும் உண்டு. அதுவும், அம்மா கேரக்டரில் சிறுவயது பெண்ணாக நடித்தவர் இவரா என ஆச்சரியப்படுத்தியவர் நியாத்தி. விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. பள்ளி பருவத்தில் ஒரே வகுப்பில் காதலித்த ஜானுவை மறக்க முடியாத ஒரு வாலிபராக, விஜய் சேதுபதியும், பள்ளி பருவத் தோழியாக ஜானு கேரக்டரில் திரிஷாவும் நடித்திருந்தார். இதில் காமெடி நடிகை தேவதர்ஷினி, திரிஷாவின் தோழியாக நடித்திருப்பார்.இதில், பள்ளி வகுப்பறையில் ஜானுவின் சிறுவயது தோழியாக தேவதர்ஷினியின் மகள் நியாத்தியே நடித்திருக்கிறார். இதுகுறித்த ஒரு நேர்காணலில் தேவதர்ஷினி கூறியதாவது, 96 படத்தில் நான் நடித்த போது, என் மகளும் நியாத்தியும் ஷூட்டிங் பார்க்க என்னுடன் வந்திருந்தாள். இந்த படத்தில், எனது சிறுவயது கேரக்டரில் அவளே நடிப்பதாக கூறினாள். அவளே எடுத்த முடிவுதான் அது. அப்போது சிறுமியாக இருந்ததால், கேமரா நம் முகத்தை நோக்கி வரும். ஆனால், சட்டென வேறுபக்கம் திரும்பி ஹீரோயின் பக்கம் போய்விடும், ஏமாற்றமாக இருக்கும் என்று அவளிடம் கூறினேன். ஆனால், அவள் எனக்கு கண்டிப்பாக இந்த எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள். அதனால், அதில் நடிக்க சம்மதித்தேன் என்று கூறியிருக்கிறார் நடிகை தேவதர்ஷினி.