திருமணம் என்றால், அது கமலுடன் தான் என்று முடிவெடுத்தவள் நான் – என்ன இந்த பிரபல நடிகை இப்படி சொல்றாங்க?

நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் மிக அழகான நடிகர்களில் மிக முக்கியமானவர்.அன்று முதல், இன்று வரை பெண்களால் ரசிக்கப்படுபவர். ஒரு காலகட்டத்தில், தனக்கு கமல் போன்ற அழகான ஆண், கணவராக வர வேண்டும் என ஆசைப்பட்ட இளம்பெண்கள் ஏராளம். 65 வயதுகளை கடந்த நிலையிலும், இப்போதும் கமல் ஹேண்ட்சம் ஆக இருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதவிதமான கெட்டப்களில் வந்து அசத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பிரபல நடிகை, திருமணம் என்று ஒன்று நடந்தால், அது கமலுடன்தான் என்று முடிவெடுத்ததாக கூறி இருக்கிறார்.சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது,
இந்தியில் ஏக் துஜே கேலியோ, சாகர் உள்ளிட்ட கமல் நடித்த படங்களை பார்த்த போது, அவர் மீது மானசீகமாக ஒரு காதல் ஏற்பட்டது. அந்த வயதில், திருமணம் என்று ஒன்று நடந்தால், கமலுடன் என முடிவு செய்தேன். அதன்பிறகு, தமிழில் நடிக்க வந்த போது, அவருடன் நான் நடித்த முதல் படம், வெற்றிவிழா. அந்த படத்தில், அவரை பார்த்தால் வாயே திறக்காமல் நிற்பேன். பேசுவதற்கு தயக்கமாக இருக்கும். பேசவே மாட்டேன்.அடுத்த படம், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்த போதுதான் அவரிடம் பழகினேன். அதற்கு பிறகு அவர், எனக்கு நல்ல வழிகாட்டியாக, ஆலோசகராக, நல்ல நண்பராக இருந்து வருகிறார். கமல், எங்கு வந்தாலும், எங்கு இருந்தாலும் நான் அங்கே இருந்தால், என் கண்கள் எப்போதும் அவர் மேலேயே இருக்கும். வேற எங்கேயாவது பாருங்க, ஏன் என்னையே பார்க்கறீங்க என கமல் சார் விளையாட்டாக திட்டுவார். என்ன சார் பண்றது, நானே நினைத்தாலும் என் கண்கள் உங்கள் கிட்ட தான் சார் வருது, என்று நானும் சொல்வேன் என்று, மனம் திறந்து பேசி இருக்கிறார் நடிகை குஷ்பு.