இவரது கண்களை பார்த்தால், நான் அப்படியே சொக்கி போய் விடுவேன் – ஹீரோவை பார்த்து, அதிரடியாக சொன்ன நடிகை அபிராமி

நடிகை அபிராமி, கேரளாவை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில், வானவில் என்ற படத்தில், அர்ஜூனுக்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து கமலுடன் விருமாண்டி, பிரபுவுடன் மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பல ஆண்டுகளாக அவரை தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், மீண்டும் மாதவன் நடித்த மாறா என்ற படத்தில், அபிராமி நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவரை காண முடிந்தது.இதையடுத்து தற்போது, விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா என்ற படத்தில் நடிகை அபிராமி நடித்துள்ளார். குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நிதிலன் சாமிநாதன் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன், நட்டி, முனீஸ்காந்த், சிங்கம்புலி, தேனப்பன் மற்றும் முக்கிய கேரக்டரில், பாரதிராஜாவும் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால், அதிக எதிர்பார்ப்புகளை இந்த படம், ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.சமீபத்தில் மகாராஜா படத்தின், பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய நடிகை அபிராமி, இந்த படத்தின் கதை என்ன என எனக்கு தெரியாது. படத்தின் போஸ்டரை பார்த்து, நானாக சில கதைகளை கற்பனை செய்துக்கொண்டு இருக்கிறேன். அது உண்மையாக இருக்காது. முதலில் கமல் சார், கண்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு அடுத்தபடியாக, விஜய்சேதுபதியின் தீவிரமான கண்களை நான் மிகவும் ரசிக்கிறேன். அவரது கண்களை பார்த்தால், அய்யய்யோ நான் அப்படியே மெய் மறந்து சொக்கிப் போய் விடுவேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.