நடிகை ஷிவானி நாராயணன், விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர். பாடிபில்டர் பாலா என்பவருடன் இவர் அடித்த லூட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரசியமாக்கியது. ஆந்திராவில் இருந்து சினிமா வாய்ப்பு தேடி வந்த ஷிவானிக்கு, தமிழ் சினிமாவில் துவக்கத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் டிவி சீரியல் பக்கம் சென்ற ஷிவானி இரட்டை ரோஜா பகல் நிலவு போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு விக்ரம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வீட்ல விசேஷங்க உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்ததால், பெரிய அளவில் இவர் தமிழ் சினிமாவில் பிரகாசிக்கவில்லை.என்றாலும் ஷிவானி மாடலிங் துறையில் இருப்பவர் என்பதால்,விளம்பரங்களில் தொடர்ந்து வருகிறார்.மேலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஷிவானி நாராயணன், அடிக்கடி தனது கிளாமரான வீடியோக்களை, புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.அதுவும், எல்லை கடந்த கவர்ச்சியில், அவர் நடனமாடும் வீடியோக்களும், உடல் அழகை அப்பட்டமாக காட்டும் புகைப்படங்களும் ரசிகர்களை பித்து பிடிக்க வைக்கின்றன. இப்போது, ப்ளு- மஞ்சள் நிற காம்பினேஷனில் பட்டு ஹாப் ஸாரியில், ஷிவானியின் க்யூட் வீடியோ, செம வைரலாகி வருகிறது.