இயக்குநருக்கு கார் கொடுக்க முடியாது, வேணும்னா தேர் கொடுக்கலாம் – மாஸ் ஹிட் கொடுத்த இயக்குநரை மரண பங்கம் செய்த நடிகர் விஷால்

கடந்த சில ஆண்டுகளாக, விஷால் நடித்த படங்கள் எதுவுமே பெரிதாக பேசப்படவில்லை. அவர் பயங்கர ஹிட் ஆகும் என நினைத்து நடித்த படங்கள் பலவும், வந்த சுவடு தெரியாமல் தியேட்டர்களை விட்டு ஓடிவிட்டன. இந்நிலையில், சமீபத்தில் திரைக்கு மார்க் ஆண்டனி படம், ரசிகர்களினஅமோக ஆதரவை பெற்று, ஓடிக்கொண்டு இருக்கிறது. வித்யாசமான கெட்டப்புகளில் விஷால், எஸ்ஜே சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இந்த படம், 1975 மற்றும் 1995 காலகட்டத்தில் நடப்பது போன்ற கதையமைப்பை கொண்டிருக்கிறது. செல்வராகவன் இதில் விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.இம்மாதம் 15ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம், ஐந்தே நாட்களில் ரூ. 100 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படத்தின் மாஸ் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் சக்சஸ் மீட் வைத்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விஷால் பேசினார். இடையிடையே எஸ்ஜே சூர்யாவும் சில கேள்விகளுக்கு காமெடியாக பதிலளித்தார்.

விக்ரம் படம் ஹிட் ஆனதால், லோகேஷ் கனகராஜூக்கு கமல், கார் பரிசளித்தார். அதே போல், ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், படத்தின் ஹீரோ ரஜினிகாந்த், டைரக்டர் நெல்சன் திலீப் குமார், இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார்களை பரிசளித்தார்.அதனால், சக்சஸ் மீட்டில் பங்கேற்ற செய்தியாளர்கள் மார்க் ஆண்டனி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பரிசாக இயக்குநருக்கு கார் கொடுப்பீர்களா என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால், கார் எல்லாம் தர முடியாது. வேண்டும்னா தேர் கொடுக்கலாம். கார் கொடுத்தால்,வேகமாக சென்று, இயக்குநர் எங்களை மறந்துவிட வாய்ப்புள்ளது. தேர் என்றால், மெதுவாக செல்லும் என, மரண பங்கமாய் கூறி இயக்குநரை கலாய்த்து விட்டார்.