தீபாவளி, பொங்கலுக்கு கூட ஊருக்கு போக காசு இல்லாம, சென்னையில் கஷ்டப்பட்ட நடிகர்கள் – நடிகர் அருள்தாஸ் சொன்னது இவர்களா?

தமிழ் சினிமாவில், இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய இடத்தில், முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள். ஹீரோவாக, காமெடியனாக, குணச்சித்திர நடிகராக தன்னை வெளிப்படுத்தி, இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இந்த நடிகர்கள் ஒரு காலத்தில், சினிமா வாய்ப்புக்காக அலைந்தவர்கள்தான். புதுமுக நடிகராக சினிமா நிறுவனங்களை தேடிச் சென்ற போது, மற்றவர்களை போலவே, புறக்கணிக்கப்பட்டு அவமதிக்கப் பட்டவர்கள்தான். அதுவும், இந்த நடிகர்களும் அந்த அவல நிலையை சந்தித்தார்கள் என்பதுதான் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.இதுகுறித்து, திரைப்பட ஒளிப்பதிவாளர், நடிகர் அருள்தாஸ் கூறியதாவது, நான் சினிமா உலகில், பலரது ஆரம்ப கால வாழ்க்கையை நன்றாக அறிவேன். விஜய் சேதுபதி, யோகி பாபு,காளி வெங்கட் , முனீஸ்காந்த் போன்றவர்கள், இங்கு சென்னையில் தான் இருந்தனர். காலையில் தங்களது புகைப்படங்களை எடுத்துச் சென்றால் சாயந்திரம் வரை, பல்வேறு பட நிறுவனங்களுக்குச் சென்று, நடிப்பதற்கான வாய்ப்பை தேடுவர். அவர்கள் கையில் சுத்தமாக பணம் இருக்காது. சாப்பிடுவதற்கும் வழி இருக்காது. பசி, பட்டினி என போராட்டத்தில்தான் ஒவ்வொரு நாளும் அவர்களது வாழ்க்கை இருந்தது. பெரும்பாலும் டீ மட்டும்தான் அவர்களுக்கு கிடைத்த உணவு.தீபாவளி, பொங்கல், புது வருஷம் என்றாலும் கூட சொந்த ஊருக்கு போக முடியாது. குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாயாவது இருந்தால், ஊருக்கு போனால் சொந்த பந்தங்களுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போக முடியும். அதனால்,சென்னையிலேயே இருந்துவிடுவர். அப்போது, கடைகளும் இங்கு மூடப்பட்டு சாப்பிடவும் எதுவும் இருக்காது. அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியால்தான், கடுமையான உழைப்பால்தான் இப்போது அவர்கள் ஜெயித்திருக்கிறார்கள். கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், சொகுசு கார்களில் போகின்றனர் என்றால், அதுவெல்லாம் சும்மா வந்துவிடவில்லை. அவர்களது கடுமையான உழைப்பும், பல்வேறு கஷ்டங்களை எல்லாம் கடந்து வந்ததுதான் காரணம், என்று கூறியிருக்கிறார்.