அவருக்கு ராசி இல்லை, அந்த படத்துல நடிக்காதீங்க என்று சொன்ன நண்பர் – அவரது பேச்சை மீறி நடித்ததால் நடிகருக்கு என்ன ஆச்சு தெரியுமா

சமீபத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில், நடிகர் சத்யராஜ் கலந்துகொணடு, சினிமா துறை சார்ந்த தனது அனுபவங்களை, பல விஷயங்களை சுவாரசியமாக பேசினார். அப்போது கருணாநிதி, மணிவண்ணன் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டு அவர் பேசியதாவது,பாலைவன ரோஜாக்கள் என்ற படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. அந்த படத்துக்கு கதை வசனம் எழுதியவர் கருணாநிதி. அந்த படத்தில் நான் நடிக்க கூடாது என நினைத்து எனது நெருங்கிய நண்பர்கள் சிலர், அதை கெடுத்துவிட முயற்சித்தனர். எனது சம்பளத்தை இரட்டிபாக கூறினர். எம்ஜிஆர் முதல்வர் என்பதால், இந்த படத்தில் நடித்தால், உன்னை கோவித்துக்கொள்வார் என்றனர்.இந்த படத்தில் நடித்தால் உன்னை திமுக காரன் என முத்திரை குத்தி விடுவர் என்றெல்லாம் கூறி என்னை பயமுத்தினர். அதை பற்றி எல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து கடைசியாக, என்னுடன் இருந்த மற்றொரு நண்பர், கருணாநிதி இன்னும் எதிர்கட்சி தலைவராகவே இருக்கிறார். அவருக்கு ராசி இல்லை. அவருக்கு நேரமும் சரியில்லை. அதனால், அவர் கதை வசனம் எழுதின படத்தில் நீ நடிக்க வேண்டாம் என என்னை எச்சரித்தார். அதற்கு நான், இப்படி நீ சொன்ன பிறகு, கண்டிப்பாக நான் நடிப்பேன். நான் பெரியார் கொள்கைகளை கொண்டவன். இந்த மாதிரி மூட நம்பிக்கைகள் எல்லாம் எனக்கு கிடையாது என திட்டவட்டமாக கூறினேன். அதனால், பாலைவன ரோஜாக்கள் படத்தில் நடிக்க பெரியார்தான், அவரது கொள்கைகள்தான் காரணம் என பேசி இருக்கிறார். பாலைவன ரோஜாக்கள், சத்யராஜூக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்த படங்களில் ஒன்றாக அமைந்தது.