தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்த மணிவண்ணன் எனும் மகா கலைஞனை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. தமிழ் திரை உலகில் தனக்கென நீங்கா இடத்தை பிடித்தவர். காலத்தால் அழிக்க முடியாத பல காரியங்களை உருவாக்கித் தந்தவர்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். 30 வருடங்களுக்கு முன்பு அவர் சொன்ன பல அரசியல் நிகழ்வுகள் தற்போது நிஜ வாழ்க்கையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது கடைசி காலத்தில் தமிழ் தேசியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

அவ்வாறு நாம் தமிழர் கட்சியில் இருந்து அவர் ஈழத் தமிழர்கள் தொடர்பான பல போராட்டங்களில் பங்கேற்றார். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அதன் பிறகு நடிகராக பல நூறு படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவரின் மக்கள் பேச்சு மற்றும் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களின் மனதில் எப்போதும் மறவாத இடத்தைப் பிடித்துள்ளது.

அதிலும் குறிப்பாக அவரின் அரசியல் குறித்த வசனங்கள் தற்போது இணையத்தில் பிரபலமாகி கொண்டிருக்கின்றன. . இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்த மணிவண்ணனின் திருமண புகைப்பம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் அவருடன் காமெடியில் கொடிகட்டி பறந்த கவுண்டமணி இருக்கின்றார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
