“ரொம்ப ஓவரா போறீங்க”…. பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறும் குயின்சி – அசல் கோளார்…. வீடியோவை பார்த்து செம கடுப்பான ரசிகர்கள்….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் 21 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தனர். அதில் கலந்து கொண்ட ஜிபி முத்துவிற்கு மக்கள் பேராதரவு கொடுத்து வந்தனர்.ஆனால் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜி பி முத்து கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதனைப் போலவே வாக்குகள் குறைவாக பெற்று நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். முதல் நாளிலிருந்து பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நாள்தோறும் நடந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களிலும் பல கலாட்டாக்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் அவ்வபோது அசல் கோளாறு செய்யும் காதல் லீலைகள் நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்துள்ளது. அதேசமயம் அவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் பலரையும் முகம் சுடிக்க வைக்கும் வகையில் உள்ளது.ஒவ்வொரு நாளும் பெண்களிடம் இவர் நடந்து கொள்ளும் விஷயங்களை பார்த்து பலரும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றும்படி கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பெண் போட்டியாளரான குயின்சி மேல் கால் மேல் கால் போட்டு அசல் கோளாறு அமர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் விமர்சனங்களை பெற்று வருகிறது.