பச்சிளங்குழந்தையை கழுத்தை நெரிச்சு கொல்லுவியா- மூத்த நடிகரின் கேள்வியால் பதைபதைத்து போன உலக நாயகன் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில தினங்களில், விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணிகளில் ஈடுபட உள்ளார். தவிர, அவ்வப்போது கட்சி பணிகளுக்காக மாவட்ட தலைநகரங்களுக்குச் சென்று, கட்சி நிர்வாகிகளை சந்தித்து, அந்த கட்சி கூட்டங்களிலும் பேசி வருகிறார். இவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது நடக்கும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டு தனது எண்ணங்களை பிரதிபலித்து வருகிறார்.நேற்று சென்னை லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உலக நாயகன் கமல்ஹாசன், மாணவர்களி்ன் கேள்விகளுக்கு பதில் கூறினார். அப்போது, மன அழுத்தத்தால் சிலர் சிறுவயதிலேயே தற்கொலை செய்துகொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல் பதிலளித்து பேசுகையில், எனக்கு 20,21 வயதாக இருக்கும்போது அப்படி ஒரு எண்ணம் எனக்கும் வந்தது. நான் பெரிய கெட்டிக்காரன், என்னை இந்த கலை உலகம் கண்டுகொள்ளவில்லையே என்ற கோபமும் வந்தது. அப்போது, நான் தற்கொலை செய்து கொண்டால், ஒரு நல்ல நடிகனை இழந்துவிட்டோம் என்று எல்லோரும் நினைக்கட்டும், என்ற எண்ணம் ஏற்பட்டது.

இந்த விஷயத்தை எனது குருவை போன்ற நண்பரான அனந்து என்பவரிடம் விவாதித்தேன். அவர் என்னை கண்டபடி திட்டினார். நான் உன்னை விட பெரிய ஜீனியஸ். ஆனால், என்னை எல்லாம் யாருக்குமே தெரியாது. நாம் செய்ய வேண்டிய வேலைகளை சரியாக செய்துகொண்டு இருப்போம். கண்டிப்பாக அதற்கான பலன் ஒரு நாளில் கிடைக்கும். அதற்கான கால நேரம் வரும்வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். பொறுமை இல்லாவிட்டால், போய் சேர வேண்டியதுதான் என்று எனக்கு, அறிவுரை கூறினார்.இதுபற்றிய தகவலை அறிந்துக்கொண்ட நடிகர் சோ, தற்கொலை செய்துக்கொள்ள ஆசைப்பட்டியாமே என, ஒருமுறை என்னை பார்த்த போது கேட்டார். ஆமாம் என்று, சங்கடத்துடன் கூறினேன். பிறந்த தொப்புள்கொடியுடன் இருக்கற பச்சிளங்குழந்தையை, நீ கழுத்தை நெரித்துக் கொன்று விடுவாயா எனக் கேட்டார். பதட்டப்பட்ட நான், அய்யோ, யாரோ ஒருத்தரோட குழந்தையை நான் எப்படி கொல்ல முடியும் என்றேன். அப்புறம், எப்படி உங்க அப்பா குழந்தையை, நீ கொல்லத் துணிந்தாய் என்று என்னை கேட்டார். அப்போதுதான் தற்கொலை மிக தவறான செயல் என தெளிவாக புரிந்துக்கொண்டேன். மரணம் என்பது வாழ்வின் ஒரு பகுதி. அது வரும்போது தானாக வரட்டும். அதை நாமே வரவழைத்துக்கொள்ள கூடாது, என்றார்.