கன்னத்தை கிள்ளி கொஞ்சுகிற கியூட் அழகில் அசத்திய கீர்த்தி சுரேஷ் – வைரலாகுது லேட்டஸ்ட் போட்டோஸ்

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து அசத்திக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் படங்களில் நடிக்க வந்த சில ஆண்டுகளி்ல், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பை, சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில், அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது. விஜய் உடன் பைரவா, சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், ரெமோ, தனுஷ் உடன் தொடரி என, முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார்.மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட நடிகையர் திலகம் படத்தில், சாவித்திரியாக நடித்து, சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா மேனகாவும் ஒரு நடிகையே. 25 ஆண்டுகளுக்கு முன், ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதே போல், கீர்த்தி சுரேஷின் பாட்டி, கடைக்குட்டி சிங்கம் படத்தில், கார்த்திக்கு பாட்டியாக நடித்திருப்பார்.கீர்த்தி சுரேஷ் எந்த படத்தில் நடித்தாலும், அந்த கேரக்டரை முழுமையாக உள்வாங்கி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சிவகார்த்திகேயனுடன் காதல் படங்களில் நடிக்கும் அதே வேளையில், நடிகையர் திலகம் போன்ற சீரியஸான படங்களிலும் நடித்து, ரசிகர்களின் மனங்களை கவர்ந்து விடுகிறார். இவரது நடிப்பில் பேசப்பட்ட மற்றொரு படம் பென்குயின் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில், சைமா விருது விழாவில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ், நீலநிற சூட்-கோட் உடையில், காட்சி தந்தார். அந்த கெட்டப்பில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கேரள நடிகை என்றாலே, தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி மவுசுதான். அந்த வகையில், கீர்த்தியின் இந்த அசத்தலான புகைப்படங்கள், செம வைரலாகி வருகின்றன.