நடிகர் மாரிமுத்துவுக்கு இப்படி ஒரு ஆசை இருந்ததா…? – விரக்தியடைந்த ரசிகர்கள்

நடிகர் மாரிமுத்து, கடந்த 9ம் தேதி மாரடைப்பால் காலமானார். 57 வயதான அவரது திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகர் என்ற பந்தா இல்லாமல், நெருங்கிய மனிதராக யதார்த்தமா பேசி பழகும் வெளிப்படையான அவரது தன்மை பலருக்கும் வெகுவாக பிடித்து போயிருந்தது. எதிர்நீச்சல் சீரியலில் நடித்த பிறகு, ‘ஏய் இந்தாம்மா’ என்ற அவரது ஸ்டைல் உச்சரிப்பு மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக்கியது. இந்நிலையில், துரதிஷ்டவசமாக திடீரென நடிகர் மாரிமுத்து மறைந்து விட்டார்.

நடிகர் மாரிமுத்து, இயக்குநர் வசந்த் -தின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். கண்ணும் கண்ணும், புலிவால் என, 2 படங்களை இயக்கியவர். தொடர்ந்து, சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக வலம் வந்தார். கொம்பன், பரியேறும் பெருமாள், மருது, ஜெயிலர், கடைக்குட்டி சிங்கம், கார்பன் உள்ளிட்ட பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பசுமலை என்ற கிராமத்தில், வறுமை நிறைந்த குடும்பத்தில் இருந்து, சென்னைக்கு வந்து, நடிகராக வெற்றி பெற்றவர்
இந்நிலையில், மாரிமுத்துவின் நண்பர், நடிகர் ஜீவா ரவி நேர்காணல் ஒன்றில் பேசும் போது, மாரிமுத்துவுக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிக்க வேண்டும். குறிப்பாக, பாலிவுட் படங்களில் நடிப்பது அவரது முக்கிய ஆசையாக இருந்தது, என கூறியிருக்கிறார். ஆனால், அந்த ஆசையும் கடைசியில் நிறைவேறாமல் போய்விட்டது.