தீப்பொறி பறக்கும் நடிகர் விஜய் ‘லியோ’ போஸ்டர் வெளியீடு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில், ‘லியோ’ படம், வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. வரும் 30ம் தேதி, படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. லியோ படத்தின் புதிய புதிய அப்டேட்டுகளால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர். எப்போது, லியோ படத்தின் டிரைலர் வெளியாகும் என்ற ஆர்வமும், விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு, விஜய் படத்தின் போஸ்டர் வெளியாகும் என, படக்குழு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், இப்போது அந்த போஸ்டர் வெளியிடப்பட்டு, ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

சுற்றுகிற சக்கரம் ஒன்றில், தன் கையில் இருக்கும் கத்தியை சாணை பிடித்தபடி அந்த போஸ்டரில் விஜய் இருக்கிறார். முகத்தில் கடும் கோபத்துடன் விஜய் இருக்கும் இந்த போஸ்டரில், சிவப்பு நிற துளிகள், ரத்தம் தெறித்தது போல காணப்படுகிறது. அதாவது, சண்டை காட்சிக்கு விஜய் தயாராவதைப் போன்ற சூழலில் இந்த காட்சி இருப்பதை போல, புகைப்படம் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், படத்துல தரமான சம்பவங்கள் நிறைய இருக்கும் போல இருக்கே, என கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.