புதுசா கார் வாங்கிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி…. மனைவியுடன் செம ஸ்டைலாக அவர் கொடுத்த போஸ்…. வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பிரபல வானொலியில் பணியாற்றி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் குரலுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு புத்தகம் என்ற படம் பின்னணியில் பேசி தனது பயணத்தை தொடங்கினார்.

பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் கிட்டதட்ட 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

முதன்முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு எல்கேஜி என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய இவர் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு பக்கம் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் கிரிக்கெட் பணியிலும் தொடர்ந்து வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.தனது மனைவியுடன் புதிய கார் பக்கத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது இப்போது வாங்கிய காரா என சரியாக தெரியவில்லை.