இனிமே அவரோட அந்த நடிப்பு எடுபடாதுங்க, வேற டிராக் மாறிக்கிட்டா நல்லது – பிரபல நடிகர் ஓபன் டாக்

மீசை ராஜேந்திரன், தமிழ் சினிமாவில் துணை நடிகர்களில் முக்கியமான ஒருவர். ரஜினி, அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் ஏதேனும் ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரியாக, பஞ்சாயத்து தலைவராக, காமெடி காட்சிகளில் ஒருவராக நடித்துக்கொண்டு இருப்பவர். விஜய்காந்த் கட்சியான தேமுதிக விலும் இவர் ஒரு நிர்வாகி பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.சமீபத்தில், நேர்காணல் ஒன்றில் நடிகர் வடிவேலு குறித்த சில கருத்துகளை அவர் தெரிவித்திருக்கிறார். அதில் வெளிப்படையாக சில விஷயங்களை அவர் பேசி இருக்கிறார். துவக்கத்தில் இருந்தே வடிவேலு, காமெடி நடிப்பில் அசத்தி வந்தார் என்பதை மறுக்க முடியாது. கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா கூட வடிவேலு சிறந்த காமெடி நடிகர் என சில இடங்களில் பாராட்டி இருக்கின்றனர். அதுவும் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் எல்லாம் அவரது நடிப்பும், வசனங்களும் இப்போதும் சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு சிறப்பாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. கால சூழலுக்கு ஏற்ப மனிதர்களின் மனங்களும், ரசனைகளும் மாறிவிட்டன.இனிமேல் வடிவேலுவின் காமெடி நடிப்பு எடுபடாது. அவரால் இனி காமெடியில் சாதிக்க முடியாது. அவர் இனிமேல் குணச்சித்திர வேடங்களில் நடிக்க முன்வந்தால் நல்லது.ஏனெனில், காமெடி குறித்த மக்களின் ரசனை வேறுமாதிரி ஆகிவிட்டது. அவர்கள் லவ்டுடே பிரதீப் ரங்கநாதன் போன்றவர்களின் காமெடியை ரசிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். இவர் மாமன்னன் படத்தில், நல்ல குணச்சித்திர நடிப்பை தந்துள்ளார். தேவர் மகன் படத்திலேயே இவர் நடித்தது குணச்சித்திர நடிப்புதான். அதனால், காமெடி வடிவேலுவுக்கு இனி கஷ்டம்தான் என வெளிப்படையாக கூறி இருக்கிறார் மீசை ராஜேந்திரன்.