‘எப்போது திருமணம் என்ற கேள்விக்கு இப்படி ஒரு பதிலா?’ – ‘கேட்டவுடனே அப்படியே தலை சுத்திப் போச்சு’ என்று ரஜினி ஸ்டைலில் புலம்பும் ரசிகர்கள்

விஷால்

தமிழ் சினிமாவில், பேசப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர், ‘திமிரு’ படத்தின் மூலம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய ’சண்டக்கோழி’ படம் மூலம், முன்னணி நடிகர்களில் ஒருவரானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

விஷால்

துப்பறிவாளன், அவன் இவன், சிவப்பதிகாரம், மலைக்கோட்டை, நான் சிவப்பு மனிதன், பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்கள், அவருக்கு வெற்றியைத் தந்தன.இந்நிலையில், 40 வயதுகளை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாத நடிகர்களின் வரிசையில் விஷாலும் ஒருவர். இவரது நெருங்கிய நண்பரான ஆர்யா, சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும், விஷாலுக்கும் காதல் என்று கூறப்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.

இதனால், விஷால் திருமணம் என்பது தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் அவரை எங்கு பார்த்தாலும் கேட்கும் முக்கிய கேள்வியாக இருக்கிறது. தற்போது தனியார் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய விஷால், திருமணம் குறித்த கேள்விக்கு, ஒரு குழப்பமான பதிலை தந்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்திருக்கிறார்.

விஷால்

‘ஒரு நடிகனாக எனக்கு நிறைய பொறுப்புகள் எனக்கு உள்ளது. அந்த விஷயங்களை முடித்த பின்பு, என் வாழ்விலும் திருமணம் என்று எழுதப்பட்டு இருந்தால், அது நிச்சயமாக நடந்துவிடும். திருமணம் செய்வதற்கு புரிதலும், பக்குவமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். திருமணம் என்பது சாதாரண விஷயம் அல்ல. திருமண விஷயத்தில் திடீர் முடிவு எடுக்க முடியாது. திருமணம் செய்த பின்பு, என்ன இப்படி ஆகி விட்டதே என யோசிப்பதில் எந்த பயனும் இல்லை. இதை விட மிக முக்கியம், திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது, என இப்படி ஒரு பதிலை தந்திருக்கிறார் விஷால்.