‘அந்த 15 பேரும் எனக்கு புருஷன்தான்’ – மேடையில் இப்படிச் சொல்லி வெறுப்பேற்றிய நடிகையால் வெடித்தது சர்ச்சை

கடந்த, 2019ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘ஆடை’. இதில் வித்யாசமான கேரக்டரில், நடிகை அமலாபால் நடித்திருந்தார். கதாநாயகியை மையப்படுத்திய கதைக்களமாக அந்த படம் இருந்தது. படத்தின் ஒரு காட்சியில் உடம்பில் துணியே இல்லாமல் அமலாபால் நடித்திருந்தார். ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் அமலாபால் பேசிய பேச்சுதான், இப்போது சமூக வலைதளங்களில், வைரலாகி வருகிறது.

‘படத்தின் கதையை எனக்கு சொல்லும் போதே, ஒரு காட்சியில் உடம்பில் ஆடையின்றி நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால், நடிக்க போனபோது, மனதுக்குள் பயமாக இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில், கேமரா மேன் உள்பட 15 பேர் இருந்தனர். அப்போது, அங்கிருந்த 15 பேரையும், கணவனாக நினைத்துக்கொண்டு, அந்த காட்சியில் நடித்தேன். பாஞ்சாலிக்கு 5 கணவர்கள், ஆனால், எனக்கு 15 கணவர்கள் என்ற எண்ணத்தில், தைரியமாக அந்த காட்சியில் நடித்தேன், என்று கூறியிருக்கிறார்.

அமலாபால் இப்படி பேசியது, பலரையும் அதிருப்தியடைய வைத்திருக்கிறது. பாஞ்சாலிக்கு 5, எனக்கு 15 கணவர்கள் என அமலாபால் பேசியது, பலருக்கும் பிடிக்கவில்லை. இதை கடுமையாக விமர்சனம் செய்து, சமூக வலைதளங்களில், பதிவுகளை செய்து வருகின்றனர். பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அமலா பால். நல்ல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இயக்குநர் விஜயை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போதும் படங்களில் அமலா பால் நடித்துவரும் நிலையில், அமலா பால் 5 ஆண்டுகளுக்கு முன் பேசியது, இப்போது வைரலாகி வருகிறது.