கொஞ்சுகிற அழகுல கோயம்புத்தூரு பொண்ணு – அதுல்யா ரவியின் அழகில் மயங்கிய ரசிகர்கள்

நடிகை அதுல்யா ரவி, கோவையை சேர்ந்த தமிழ் பொண்ணு என்ற பெருமையை பெற்றவர். இப்படி, தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள், தமிழ் சினிமாக்களில் நடிப்பது, பெருமைக்குரிய விஷயமாகி விட்டது. ஏனெனில் திறமை, அழகு இருந்தாலும் தமிழ் சினிமாவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பது கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த நடிகைகளாக இருப்பது கவனிக்கத்தக்கது. சினிமாவில் நடிக்க ஆர்வமும், திறமையும் இருந்தால் தமிழ்நாட்டு பெண்களும், சினிமாவில் பிரகாசிக்கலாம். அதற்கு அதுல்யா ரவியும் ஒரு உதாரணம் எனலாம்.


கடந்த 2017ம் ஆண்டில் வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற படத்தில், அதுல்யா ரவி அறிமுகமானார். தொடர்ந்து ஏமாலி, நாடோடிகள் 2 போன்ற படங்களில் நடித்தார். அதுல்யா ரவி முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட படம், நாகேஷ் திரையரங்கம். ஆனால் முதலில் ஒப்பந்தம் செய்தும் அந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், காதல் கண் கட்டுதே இவரது முதல் படமாக அமைந்தது.அடுத்து வந்த நாகேஷ் திரையரங்கம் படத்தில்,நடிகைசித்தாராவின் மகளாக, ஆரியின் சகோதரியாக நடித்திருந்தார். தொடர்ந்து சுட்டுப்பிடிக்க உத்தரவு என்ற படத்தில் விக்ராந்த் ஜோடியாகவும், அடுத்த சாட்டை, வட்டம், காடவர் போன்ற படங்களிலும், அதுல்யா ரவி சிறப்பான நடிப்பை தந்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துவரும் அதுல்யா ரவி, சோஷியல் மீடியாவில் மிக ஆர்வமாக இருக்கிறார். அதனால், அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். இப்படிப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்வதால், அதை பார்க்கும் இயக்குநர்கள்,நடிகர்கள் தங்களது அடுத்த படங்களில் அவர்களை கமிட் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதே வேளையில், பட வாய்ப்புகள் இல்லாத நிலையிலும், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் அப்டேட் ஒரு விதத்தில் உதவுகிறது. அந்த வகையில், அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள், இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.