தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருபவர் ஐஸ்வர்யா மேனன். இவர் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாம் தமிழ்நாட்டில், கொங்கு மண்டலமான ஈரோடு தான். ஆனால் இவரது குடும்பம், கேரளா மாநிலம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தது. அதனால், மலையாளத்தை பாரம்பரியமாக கொண்ட தமிழ்நாட்டு பொண்ணு என்ற பெருமைக்கு சொந்தக்காரராக ஐஸ்வர்யா மேனன் இருக்கிறார். பல முக்கிய படங்களில், நடித்திருந்தாலும் சில படங்களில் மட்டுமே, இவரது கேரக்டர் ரசிகர்களால் அதிகம் கவனித்து பேசப்பட்டது.
தமிழ் சினிமாவில், சித்தார்த் – அமலாபால் ஜோடியாக நடித்த காதலில் சொதப்புவது எப்படி, படம் தான் ஐஸ்வர்யா மேனன் அறிமுகமான முதல் படம். அதைத் தொடர்ந்து, கன்னட மொழியில், தசாவாலா என்ற படத்தில், மனநலம் பாதித்த பெண்ணாக அவர் நடித்திருந்தார்.
இந்த படம், கடந்த 2013ம் ஆண்டு, அக்டோபரில் வெளியானது. தமிழில், ஆப்பிள் பெண்ணே என்ற அம்மா மகள் உறவை மையப்படுத்திய படத்தில் இவர் மகளாகவும், ரோஜா அம்மாவாகவும் நடித்திருந்தனர்.இதையடுத்து நகைச்சுவை திகில் படம், நமோ பூதாத்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.
மான்சூன் மாங்கோஸ் என்ற பகத் பாசில் நடித்த மலையாள படத்தில் ஐஸ்வர்யா மேனன் அறிமுகமானார். தமிழ் படம் 2, தெலுங்கில் லவ் பெயிலியர், தமிழில் நான் சிரித்தால், வேழம் உள்ளிட்ட பல படங்களில்,ஐஸ்வர்யா மேனன் நடித்து, ஒரு முக்கிய நடிகையாக வலம் வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில், டிரான்ஸ்பரெண்ட் சேலையில், இவரது கிளாமரான புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. அம்சமான தோற்றத்தில் அவரை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள், ஏக்க பெருமூச்சு விட்டபடி, லைக் பட்டன்களை தட்டி வருகின்றனர்.