71 வயது மூத்த நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஜோதிகா….. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை ஜோதிகா. ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் இவரை மிகப்பெரிய அளவில் கொண்டாடினர். முதல் முதலில் 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். முதல் படமே நல்ல ஹிட் கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

இதனால் திரை பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கண்டால் ஜோதிகா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அவ்வகையில் குஷி, திருமலை, மொழி,சந்திரமுகி மற்றும் வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் இவரது திரைப்பயணத்தில் இருக்கின்றன. இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இவர் சூர்யாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகினார் நடிகை ஜோதிகா. அதன் பிறகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் முழுக்க முழுக்க குடும்பத்தில் கவனம் செலுத்தி வந்த ஜோதிகா தனது பிள்ளைகள் ஓரளவு வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்தார். தற்போது நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அவ்வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் இறுதியாக நடித்த உடன்பிறப்பே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் தற்போது மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் மலையாள திரைப்படம் ஒன்றில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஃபேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ஜியோ பேபி இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.