முண்டா பனியன் வாலிபருடன் ஆட்டோவில் பயணித்த கீர்த்தி சுரேஷ் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவை சேர்ந்தவர். தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். ரஜினி முருகன், தொடரி, சாமி 2, ரெமோ, அண்ணாத்த, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், சர்கார், பெண்குயின், சாணிக்காயிதம், மாமன்னன், சைரன் என வெற்றிப் படங்களில் நடித்தவர். நடிகையர் திலகம் படத்தில், மறைந்த நடிகை சாவித்திரி கேரக்டரில் இவரது நடிப்பு, வெகுவாக பேசப்பட்டது.கீர்த்தி சுரேஷின் குடும்பமே கலைக்குடும்பம் தான். அவரது அம்மா மேனகாவும் நடிகை. 20 ஆண்டுகளுக்கு முன், அவரும் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். அப்பா – மகன் என 2 வேடங்களில் ரஜினி நடித்த நெற்றிக் கண் படத்தில், மகன் ரஜினிக்கு மேனகா ஜோடியாக நடித்திருப்பார். அவரது மகள் கீர்த்தி சுரேஷ், அண்ணாத்த படத்தில், ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். கடைக்குட்டி சிங்கம் படத்தில், சத்யராஜூக்கு தாயாக, கீர்த்தி சுரேஷின் பாட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில், ப்ளூ ஜீன்ஸ், முண்டா பனியன் போட்ட ஒரு சிவப்பு நிற வாலிபருடன் ஆட்டோ ஒன்றில், கீர்த்தி சுரேஷ் பயணிப்பது போன்ற வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் இந்தி நடிகர் வருண் தவான் என்பது தெரிய வந்துள்ளது. படப்பிடிப்பு நேரத்தின் இடைவேளையின் போது, இருவரும் இப்படி ஜாலியாக ஆட்டோவில் ஒரு ரைடு வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், கீர்த்தி சுரேஷ் உடன் இருப்பவர் நடிகர் என தெரியாததால், ஒரு இளைஞருடன், கீர்த்தி சுரேஷ் ஆட்டோவில் பயணிப்பதாக, தகவல் பரவி அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.