மகளாக நினைத்த பெண்ணுடன் ஜோடியாக நடிப்பதா – படமே வேண்டாம் என்று கூறிய மாஸ் ஹீரோ

நடிகர் விஜய் சேதுபதி, ரசிகர்கள் மிக விரும்பும் கதாநாயகனாக வெற்றி பெற்றவர். தமிழில் பல சக்சஸ் படங்களில் நடித்தவர். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று கூறாமல், வில்லன் கேரக்டர்களையும் ஏற்று நடிப்பவர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தினார். அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில், கமலுக்கு வில்லனாக நடித்தார். இப்போது, இந்தியில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்துள்ள ஜவான் படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்து பாராட்டுகளை பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.துவக்கத்தில் தமிழ் படங்களில் நடித்த விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி என பிறமொழி படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார். இப்போது, நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நான் தமிழ் என்ற புதுப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஹீரோயின் ஆக நடிக்க, இளம் நடிகை கீர்த்தி ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, படத்தின் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி என்றால், அவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என ஓபனாக கூறிவிட்டார்.

இதைக் கேட்டு அதிர்ந்து போன படக்குழுவினரிடம், உப்பேனா என்ற தெலுங்கு படம் ஒன்றில், கீர்த்தி ஷெட்டிக்கு அன்பான அப்பாவாக நான் நடித்திருக்கிறேன். மகளாக நினைத்து நடித்த அவருடன், என்னால் இப்போது இந்த படத்தில் ஜோடியாக நடிக்க முடியாது. உண்மையில் கீர்த்தி ஷெட்டியை என் மகளாகவும், நான் அவரது தந்தையாகவுமே கருதி நடித்த நிலையில், அவருடன் நடிக்க முடியாது என உறுதியாக மறுத்துள்ளார்.இந்த விஷயம் குறித்து, நடிகர் விஜய் சேதுபதியே சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறி இருக்கிறார். அவரது இந்த மனப்பான்மையை அறிந்த ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.