மூக்கு உடைந்தாலும், பரவாயில்லை, மீண்டும் இங்குதான் வருவேன் என்று தைரியமாக சொன்ன தமிழ்பட ஹீரோ

தமிழ் சினிமாவில், சில ஹீரோக்கள் ஒரு காலகட்டத்துக்கு பிறகு அரசியலுக்கு வந்துவிடுகின்றனர். ஆனால், தமிழக அரசியலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினிகாந்த். ஆனால், அவர் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளுக்கு முன் கண்ணாமூச்சி காட்டிவிட்டு, அரசியலுக்கு வரவில்லை என ஒதுங்கிக்கொண்டார். ஆனால், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை துவங்கி, தமிழக அரசியலில் ஒரு கலக்கு கலக்கியவர் விஜயகாந்த். ஆனால், இப்போது உடல்நலமின்மை காரணமாக, அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

யாருமே எதிர்பார்க்காத நிலையில், திடீர் என அரசியலுக்கு வருவதாக அறிவித்து, மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கியவர் கமல்ஹாசன். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆளும் கட்சி, மத்திய அரசுகளை கடுமையாக விமர்சித்தும் பேசி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், வரும் தேர்தலில் கோவையில் போட்டியிட இப்போது தயாராகி விட்டார்.சமீபத்தில், கோவையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன்,
மூக்கு உடைந்தாலும், எனக்கு பரவாயில்லை. மருந்து போட்டுக்கொண்டு, மறுபடியும் வந்து இங்கு தான் நிற்பேன். போர்வரிசையில் முன்னால் வந்து நிற்க தயங்கினால், நீ தலைவனே இல்லை. நமக்கு ஆதரவு உள்ளது. கட்டடம் கட்ட கொத்தனார் இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. செங்கல், சிமெண்ட் ஆட்கள் எல்லாருமே உள்ளனர். மதுரை திருச்சி, சென்னை தெற்கு என, பல பகுதிகளில் இருந்து என்னை அழைக்கின்றனர். அங்கு எல்லாம் நான் வந்துதான் ஆகணும். தமிழகத்தில் 39 இடங்களிலும், பாண்டிச்சேரியில் ஓரிடம் எல்லா இடங்களுமே நமக்கு முக்கியம் என, வருகிற தேர்தலை மையப்படுத்தி கமல்ஹாசன் பேசியது வைரலாகி வருகிறது.