தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக பலம் வந்தவர் தான் நடிகர் லோகேஷ். 90களில் ஜீபூம்பா மற்றும் மர்ம தேசம் ஆகிய தொடர்களில் நடித்து மக்களின் மனதை வெகுவாக கவர்ந்து முன்னணி குழந்தை நட்சத்திரமாக வளம் வந்தவர் தான் லோகேஷ். மர்ம தேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்தியிருப்பார். பிறகு ஜீபூம்பா தொடர்மோடம் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் டைரக்ஷனில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் பல வேலைகளையும் செய்து வந்தார்.

அதேசமயம் சில குறும்படங்களையும் இயக்கி வெளியிட்டவர். இதனிடையேஇவர் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வருவார் என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி வெளியாகி உள்ளது. இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரின் மனைவி அனுஷா இவரை பிரிந்து சென்றதும்,கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

அதனால் மனம் உடைந்த லோகேஷ் தற்கொலை செய்து கொண்டு உள்ளாராம்.மேலும் லோகேஷன் உடலை பார்வையாளர்கள் போல வந்து பார்த்து அனுஷா உடல் தங்களுக்கு வேண்டாம் என தடையில்லா சான்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
