
நடிகை பிரணிதா சுபாஷ், தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனங்களை தன் அபாரமான அழகால் கவர்ந்தவர். இவர் மாடலிங் துறை சார்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சில நடிகைகள் மிக அழகாக இருந்தும், நடிப்பாற்றல் இருந்தும் நல்ல கதைகள், படங்கள் இல்லாததால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போகிறது. அதில் பிரணிதாவும் ஒருவராக இருக்கிறார்.
கடந்த 2010ம் ஆண்டில் போக்கிரி என்ற தெலுங்கு படத்தின் கன்னட பதிப்பின் மூலம், சினிமாவில் அறிமுகமானார். தமிழில் உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், எனக்கு வாய்த்த அடிமைகள் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக அவர் நடித்த இந்த படங்களில் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றதால், தமிழில் அவரால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.
எனினும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் பிரணிதா அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதோடு, அவருக்கு அடுத்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் தரலாம்.
அந்த வகையில், உடலின் கவர்ச்சியான பாகங்கள் அப்பட்டமாக தெரியும் கிளாமரில், நடிகை பிரணிதா அப்டேட் செய்துள்ள இந்த புகைப்படங்கள், இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.