நடிகை பூஜா ஹெக்டே, மும்பையை சேர்ந்தவர் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 2ம் இடம் பெற்ற அழகி இவர். நடிப்பாற்றல் மிக்கவராக இருப்பதால், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
கடந்த 2012ம் ஆண்டில் இயக்குநர் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். க்ரைம் த்ரில்லர் படமான இது, பெரிய அளவில் பேசப்படவில்லை. எனினும், இந்த படத்தில் காதல் காட்சிகளில் சிறந்த நடிப்பை பூஜா ஹெக்டே தந்திருந்தார்.தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டில், ஒக லைலா கோஷம் என்ற படத்தில் நடித்து தெலுங்கில், பூஜா ஹெக்டே அறிமுகமானார். தொடர்ந்து, தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்து வருகிறார்.
தெலுங்கு படங்களில் இவர் கவர்ச்சியாக நடிப்பதால், ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதே வேளையில், நல்ல கேரக்டர்களையும் பூஜா ஹெக்டே தேர்வு செய்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, கடந்த 2016ம் ஆண்டில், மொஹன்ஜதாரோ என்ற இந்தி படத்தில் பூஜா ஹெக்டே அறிமுகமாகி, சில இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். எனினும் பெரிய அளவில் இன்னும் பாலிவுட்டில் பேசப்படும் படங்களில் நடிக்கவில்லை.நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில், முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக நடித்ததால், இவர் தமிழ் திரையுலகில் அதிகமான கவனத்தை பெற்றார்.
ஆனால், படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாததால், தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகளை பெற முடியவில்லை. எனினும் இவர் தெலுங்கில் அதிக படங்களில் இப்போது நடித்திருக்கிறார்.சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் பூஜா ஹெக்டே, அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து விடுகிறார். உடலின் கவர்ச்சியான பாகங்களை காட்டும் இந்த புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் தங்களது இரவு நேர தூக்கத்தை இழக்கின்றனர். அசத்தலான அந்த கிளாமர் புகைப்படங்கள், சில மணி நேரங்களில் வைரலாகி விடுகின்றன.